பருந்து vs கழுகு வித்தியாசங்கள் என்ன? இந்த பதிவில் கழுகு மற்றும் பருந்து இரண்டிற்கும் உள்ள பல வேறுபாடுகளை விளக்கியுள்ளோம்.
கழுகு மற்றும் பருந்து இரண்டுமே வேட்டையாடும் பறவைகள். இந்த இரு பறவைகளுக்குள் சில ஒற்றுமைகள் இருந்தாலும், அவற்றின் உடல் அளவு, வாழ்விடம், வேட்டையாடும் பாணி மற்றும் இரையின் வகை ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
பருந்து vs கழுகு: இந்த இரு பறவைகளும் எவ்வாறு வேறுபடுகின்றன, அவற்றினுள் உள்ள வித்தியாசங்கள் என்ன என்று பார்க்கலாம்.
பருந்து vs கழுகு: கழுகுக்கும் பருந்துக்கும் உள்ள வேறுபாடு
வேறுபாடுகள் | பருந்து | கழுகு |
---|---|---|
அளவு | இது ஒரு நடுத்தர அளவிலான வேட்டையாடும் பறவை. | இது ஒரு பெரிய அளவிலான வேட்டையாடும் பறவை. |
தோற்றம் மற்றும் அம்சம் | சிறிய தலை, குறுகிய வளைந்த அலகு, நீண்ட கூரான இறக்கைகள் மற்றும் V- வடிவ வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. | பெரிய தலை, பெரிய அலகு, நீண்ட மற்றும் பரந்த இறக்கைகள் மற்றும் விசிறி வடிவ வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. |
எடை | 250 கிராம் – 2 கிலோ வரை இருக்கும் | பொதுவாக 4-8 கிலோ வரை இருக்கும் |
நிற வேறுபாடு | பருந்துகள் பொதுவாக கருப்பு, பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும். | கழுகுகள் தங்கம், கருப்பு-சாம்பல் மற்றும் பழுப்பு நிறங்களில் காணப்படுகின்றன. |
இனங்களின் எண்ணிக்கை | 20-30 வகையான இனங்கள் உள்ளன | 2 இனங்கள் (நில கழுகுகள் மற்றும் கடல் கழுகுகள்) |
வாழ்விடங்கள் | நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள ஒரு உயரமான மரத்தில், புல், மரக்கிளைகள் மற்றும் குச்சிகளை கொண்டு கூடுகளை கட்டுகின்றன | கூடு மிகப் பெரியது, ஆறு அடி அகலம் வரை இருக்கலாம். அவை உயரமான மரங்கள் அல்லது உயரமான பாறைகளில் ஐரிஸ் எனப்படும் கூடுகளை உருவாக்குகின்றன. |
உணவின் ஆதாரம் | பூச்சிகள் மற்றும் சிறிய பாலூட்டிகள். | மீன், பாம்புகள், நடுத்தர மற்றும் சிறிய முதுகெலும்புள்ள விலங்குகள், சிறிய பாலூட்டிகள். |
வேட்டை நுட்பங்கள் | மற்ற பறவைகளை துரத்தி அதன் இரையை பிடுங்குவது. பூச்சிகள், ஊர்வன, நத்தைகள் போன்றவற்றை வேட்டையாடி உண்ணும். | திறமையான வேட்டைப் பறவை. தன் இரையைப் பிடித்து தரையிறங்காமல் அதை தூக்கிக்கொண்டு பறக்கும் ஆற்றல் கொண்டது. |
முட்டைகள் | பெரும்பாலான இனங்கள் வெள்ளை அல்லது வெளிர் நீல நிறங்களில் முட்டைகளை இடுகின்றன. பொதுவாக பழுப்பு நிற புள்ளிகளுடன் முட்டைகள் காணப்படும். பருந்து ஒரு நேரத்தில், 2-7 முட்டைகள் வரை இடும். | பெரும்பாலான இனங்கள் இரண்டு வெள்ளை முட்டைகள் வரை இடுகின்றன. |
அடைகாக்கும் காலம் | அடைகாக்கும் காலம் சுமார் 30-40 நாட்கள் ஆகும். | அடைகாக்கும் காலம் 35 முதல் 45 நாட்கள் வரை இருக்கும். |
பருந்து vs கழுகு: வேறுபாடுகள்
1. அளவு
பருந்துகள் மற்றும் கழுகுகள் இரண்டையும் அவற்றின் எடை மற்றும் அளவுகளால் வேறுபடுத்தலாம். கழுகு என்பது பெரிய அளவிலான வேட்டையாடும் பறவை, அதேசமயம் பருந்து ஒரு நடுத்தர அளவிலான கொள்ளையடிக்கும் பறவை.
கழுகுகள் அதிக எடை கொண்டவை, அதேசமயம் பருந்துகள் கழுகுகளை விட சிறியதாகவும் இலகுவாகவும் இருக்கும்.
2. தோற்றம் மற்றும் அம்சம்
பொதுவாக, கழுகுகள் பெரிய தலைகள், பெரிய அலகுகள், நீண்ட மற்றும் பரந்த இறக்கைகள் மற்றும் விசிறி வடிவ வால்களைக் கொண்டிருக்கும்.
பருந்துகள் சிறிய தலைகள், குறுகிய வளைந்த அலகுகள், நீண்ட கூரான இறக்கைகள் மற்றும் V- வடிவ வால்களைக் கொண்டிருக்கும்.
3. கழுகு Vs பருந்து: நிற வேறுபாடு
பருந்துகள் மற்றும் கழுகுகள் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளன, இது இரண்டு பறவைகளுக்கு இடையிலான முக்கிய உடல் வேறுபாடுகளில் ஒன்றாகும்.
பருந்து vs கழுகு: கழுகுகள் தங்கநிறம், பழுப்பு மற்றும் கறுப்பு-சாம்பல் நிறங்களில் காணப்படுகின்றன. பருந்துகள் பொதுவாக கருப்பு, பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும்.
4. இனங்கள்
கழுகுக்கும் பருந்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்று இரண்டு பறவைகளுக்கும் இடையே உள்ள இனங்களின் எண்ணிக்கை.
கழுகுகளில், கடல் கழுகுகள் மற்றும் தரை கழுகுகள் என இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. இருப்பினும், உலகம் முழுவதும் சுமார் 20-30 வகையான பருந்துகள் உள்ளன. எனவே தான் நாம் கழுகுகளை விட பருந்துகளை அதிகமாக பார்க்க முடிகிறது.
5. பருந்து vs கழுகு: வாழ்விடங்கள்
கழுகுகள் பொதுவாக ஆறு அடி அகலம் கொண்ட மிகப் பெரிய கூடுகளை உருவாக்குகின்றன. அவற்றின் கூடுகள் ஐரிகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை பொதுவாக உயரமான பாறைகளில் அல்லது உயரமான மரங்களில் கூடு கட்டுகின்றன.
மறுபுறம், பருந்துகள் தங்கள் கூடுகளை குச்சிகள் மற்றும் மரக்கிளைகளால் கட்டி, அவற்றை புல்லால் வரிசைப்படுத்துகின்றன. இந்த பருந்து கூடுகள் பொதுவாக உயரமான மரங்களில், முக்கியமாக நீர் ஆதாரங்களுக்கு அருகில் காணப்படும்.
6. கழுகு மற்றும் பருந்துக்கான உணவு வேறுபாடுகள்
பருந்து vs கழுகு: கழுகுகள் பொதுவாக மீன், பாம்புகள், நடுத்தர மற்றும் சிறிய முதுகெலும்புள்ள விலங்குகள், சிறிய பாலூட்டிகள் மற்றும் பிற பறவைகளை உண்கின்றன.
பருந்துகள் ஊர்வன, பூச்சிகள், நத்தைகளை வேட்டையாடுகின்றன.
7. கழுகு மற்றும் பருந்தின் வேட்டை நுட்பங்கள்
கழுகுக்கும் பருந்திற்கும் வேட்டையாடும் முறையில் பெரிய வேறுபாடுகள் உள்ளது. கழுகுகள் சிறந்த கண்பார்வை கொண்ட மிகவும் திறமையான வேட்டைப் பறவை. இவை உயரமாகப் பறந்து வட்டமாகச் சுற்றி இரையைத் தேடுகின்றன. தன் இரையைப் பிடித்து தரையிறங்காமல் அதை தூக்கிக்கொண்டு பறக்கும் ஆற்றல் கொண்டது.
கழுகு மற்றும் பருந்து இரண்டுமே பிற பறவைகளிடமிருந்து இரையைப் பறிக்கும் இயல்புடையவை. ஆனால் பருந்துகள் வேட்டையாடுவதைவிட பிற பறவைகளிடம் இரையை பறிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தும்.
ஆனால் கழுகுகள் அதிகமாக வேட்டையாடும் இயல்புடையவை. சில பருந்து இனங்கள் மட்டுமே பூச்சிகள், ஊர்வன மற்றும் சிறிய பாலூட்டிகளை வேட்டையாடும்.
கழுகு, தன் பார்வை திறன் மற்றும் வேகத்தைப் பயன்படுத்தி, பதுங்கியிருந்து தாக்கும் உத்திகள் மூலம் இரையைப் பிடிக்கும். மேலும், தரையிறங்காமல் தன் இறையுடன் பறந்து சென்று, எளிதாக வேட்டையாடி உண்ணும்.
8. கழுகு மற்றும் பருந்தின் முட்டை பண்புகள்
இரண்டு பறவைகளும் வெவ்வேறு நிறம் மற்றும் எண்கள் கொண்ட முட்டைகளை இடுகின்றன.
பருந்துகள் கணிசமான எண்ணிக்கையிலான முட்டைகளை இடுகின்றன. அவை 2-7 வரை இருக்கும். மேலும் இனம், உணவு மற்றும் வாழ்விடத்தைப் பொறுத்து பத்து முட்டைகள் வரை கூட இடுவதாக அறியப்படுகிறது. முட்டைகளின் நிறம் வெளிர் நீலம் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால் அவை பொதுவாக பழுப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும்.
மறுபுறம், கழுகுகள் வெள்ளை முட்டைகளை இடுகின்றன. மேலும், முட்டைகளின் எண்ணிக்கை இரண்டுக்கு மேல் இருக்காது.
கழுகு – தோற்றம் மற்றும் பண்புகள்
கழுகு ஒரு வேட்டையாடும் பறவை. கொள்ளையடிக்கும் பறவையும் கூட. பிற பறவைகளிடமிருந்து இரையை லாவகமாக கொள்ளையடிக்கும்.
கழுகுகள் பார்ப்பாகற்கு மிகப்பெரிய பறவை. வலிமையான உடல் அமைப்பு, கனமான தலை மற்றும் பெரிய அலகு ஆகியவற்றுடன் பெரிய அளவில் இருக்கும்.
சில கழுகு இனங்கள் தோராயமாக 8 கிலோ எடையுள்ளதாக இருக்கும். கழுகுகள் வேட்டையாடுபவர்கள் மட்டுமல்ல, தோட்டிகளும் (இறந்த விலங்குகளை உண்ணும் பறவை) கூட.
கழுகுகள் அவற்றின் வேகம் மற்றும் சிறந்த பார்வை திறனுக்கு பெயர் பெற்றவை. ஒரு கழுகின் பார்வை மற்ற வேட்டையாடும் பறவைகளின் பார்வையை விட வலிமையானது. சொல்லப்போனால், இது மனிதனின் பார்வையை விட 4-8 மடங்கு வலிமையானது. அவை தூரமாக இருக்கும் இரையை கூட, எளிதாக அடையாளம் காண உதவுகின்றன.
கழுகின் இறகுகள், நகங்கள் அல்லது அலகுகள் என, ஏதாவது உடல் பாகங்களில் சேதம் ஏற்பட்டால் இயற்கையாகவே வளரும் திறன் கொண்டது. இதன் மூலம் அதன் ஆயுளை நீட்டிக்கும்.
கழுகுகள் முக்கியமாக கடல் கழுகுகள் மற்றும் நில கழுகுகள் என இரண்டு வெவ்வேறு இனங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
பருந்து: தோற்றம் மற்றும் பண்புகள்
பருந்து என்பது கழுகைப்போலவே ஒரு வேட்டையாடும் பறவை. இது பார்ப்பதற்கு கழுகைவிட சற்று சிறியதாகவும், எடை குறைவாகவும் இருக்கும்.
கழுகு மற்றும் பருந்து இரண்டுமே, Accipitridae எனும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
பருந்துகள் பொதுவாக உலகம் முழுவதும் வெப்பமான காலநிலை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. பருந்துகள் பொதுவாக பறக்கும் போது காற்றில் மிதக்கும்.
சில வகையான பருந்துகள் தோட்டிகளாகும். ஆனால் அவை ஊர்வன, பூச்சிகள் மற்றும் கொறித்துண்ணிகளையும் உண்ணும். வெவ்வேறு வகையான பருந்துகள் வெவ்வேறு வாழ்விடங்களில் வாழ்கின்றன. உதாரணமாக, பிராமினி பருந்துகள் அடிக்கடி நதிகளில் வாழ்கின்றன, அதே நேரத்தில் கருப்பு பருந்துகள் நகரங்களில் வசிக்கின்றன.
பருந்து மற்றும் கழுகு இடையே உள்ள ஒற்றுமைகள்
- இரண்டு பறவை இனங்களிலும், பெண் பறவைகள் ஆண்களை விட பெரியது.
- கழுகுகள் மற்றும் பருந்துகள் இரண்டும் கொள்ளையடிக்கும் பறவைகள் மட்டுமல்ல, தோட்டிகளும் கூட.
- பருந்துகள் மற்றும் கழுகுகள் மாமிச பறவைகள்.
மேலும் படிக்க:
- Tamil Language Tamil Number Names 1 to 1000
- 100 பழங்கள் பெயர்கள் தமிழ், ஆங்கிலம்
- 150+ Fish Names in Tamil and English with Pictures
References
பருந்து vs கழுகு வித்தியாசங்கள் என்ன? இந்த பதிவில் கழுகிற்கும் பருந்திற்கும் உள்ள பல வேறுபாடுகளை விளக்கியுள்ளோம்.
இந்த இரு பறவைகளும் (கழுகு vs பருந்து) எவ்வாறு வேறுபடுகின்றன, அவற்றினுள் உள்ள வித்தியாசங்கள் என்ன என்று பார்த்தோம். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். உங்கள் சந்தேகங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் மூலம் தெரிவிக்கலாம்.