மனைவி பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

வெல்லத்தை விட இனிப்பாக இருக்கும் என் இனியவளுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். என்றும் அன்புடன் உன் உயிர் தோழன்!

 

அன்பும் பாசமும் நிறைந்த உன் இதயத்தில் எனக்கு இடம் கொடுத்து,

என்னை அன்போடு கவனித்துக்கொள்ளும்,

என்  இனியவளுக்கு…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

என் இதயத்தில் இடம் பிடித்து.

என் வாழ்க்கையை வண்ணமயமாக்கிய என் இனிய மனைவிக்கு,

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

கடவுள் எனக்கு சொர்க்கத்திலிருந்து அனுப்பிய பரிசு, நீ!

உன் புன்னகையால் என்னை மயக்குகிறாய்!

என் இதயத்தை தொட்டு என்னை மகிழ்விக்கிறாய்!

இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.

என் அன்பு மனைவிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

என் வாழ்க்கையில் நீ வந்ததற்கு, நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை!

என்னை விட அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே.

 

இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்த, என் அன்பு மனைவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

என் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை நான் உணர காரணமான என் அன்பு மனைவிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here