கரிசலாங்கண்ணி எண்ணெய் பயன்கள் – கரிசலாங்கண்ணி எண்ணெயின் 11 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். (karisalankanni for hair growth benefits in Tamil)
கரிசலாங்கண்ணி “மூலிகைகளின் ராஜா”, ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகை எண்ணெய் பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
கரிசலாங்கண்ணி எண்ணெய் பயன்களில் மிக முக்கியமானது தலைமுடி பராமரிப்பு தான். முடி உதிர்தல், பொடுகு மற்றும் இளநரை போன்ற அனைத்து முடி பராமரிப்பு பிரச்சனைகளை கரிசலாங்கண்ணி எண்ணெய் எளிதாக தீர்க்கிறது.
கரிசலாங்கண்ணி மூலிகையை ஃபால்ஸ் டெய்சி (False Daisy) என்றும் அழைப்பர். நீங்கள் இதை பொதுவாக “பிருங்கராஜ்” என்ற பெயரில் பல ஷாம்பூக்களில் பார்க்கலாம். இந்த மருத்துவ மூலிகை சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தியா, தாய்லாந்து மற்றும் பிரேசில் போன்ற ஈரமான பகுதிகளில் வளரும்.
கரிசலாங்கண்ணி மூலிகையில் இரண்டு வகைகள் உள்ளன – ஒரு செடி மஞ்சள் பூக்களைத் தரும், மற்றொன்று வெள்ளை பூக்கள். இரண்டு வகையான பூக்களும் எண்ணெயைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் பொதுவாக எண்ணெய் தயாரிக்க வெள்ளை பூக்கள் கொண்ட கரிசலாங்கண்ணி செடியை பயன்படுத்துவர்.
கரிசலாங்கண்ணி எண்ணெய் செய்வது எப்படி?
வீட்டிலேயே இந்த கரிசலாங்கண்ணி எண்ணெய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கரிசலாங்கண்ணி எண்ணெய் என்பது கரிசலாங்கண்ணி மூலிகையின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.
கரிசலாங்கண்ணி எண்ணெய் செய்முறை
- கரிசலாங்கண்ணி மூலிகையின் இலைகளை 3-4 நாட்களுக்கு நிழலில் உலர வைக்கவும்.
- பின்னர் உலர்ந்த இலைகளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து (இந்த எண்ணெயை அதன் நிறம் பச்சை நிறமாக மாறும் வரை) மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வெயிலில் வைக்கவும்.
கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிப்பதற்கான மற்றொரு எளிய முறை, தேங்காய் எண்ணெயில் கரிசலாங்கண்ணி இலைகளை பொடி செய்து போட்டு காய்ச்சி வடிகட்டி வைக்கலாம்.
கரிசலாங்கண்ணி எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது?
நீங்கள் முடி வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி எண்ணெயை இருவிதமாக பயன்படுத்தலாம். ஒன்று எண்ணெய்யாக, மற்றொன்று பொடியாக!
முடி வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி எண்ணெய்
- சிறிது கரிசலாங்கண்ணி எண்ணெயை உங்கள் உங்கள் தலையில் விட்டு 10 நிமிடம் மசாஜ் செய்யவும்.
- பின் ஒரு மணி நேரம் அப்படியே ஊற விடுங்கள்.
- அதன் பின்பு ஷாம்பு போட்டுக் குளிக்கவும்.
முடி வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி பொடி
- கரிசலாங்கண்ணி பொடியை தண்ணீர், எண்ணெய் அல்லது தயிருடன் கலந்து, உலர்ந்த கூந்தலில் தடவி சுமார் 30 நிமிடம் அப்படியே விடுங்கள்.
- பின் ஷாம்பு போட்டு முடியை அலசுங்கள்.
ஊட்டச்சத்து நிறைந்த கரிசலாங்கண்ணி எண்ணெய்
கரிசலாங்கண்ணி எண்ணெயில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன.
இந்த சூப்பர் எஃபெக்டிவ் ஆயில் முக்கியமாக முடி நன்கு அடர்த்தியாக வளர பயன்படுத்தப்படுகிறது.
கரிசலாங்கண்ணி எண்ணெயின் நன்மைகள்
ஆயுர்வேத மருத்துவத்தில், கரிசலாங்கண்ணி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கரிசலாங்கண்ணி இலைகள் கல்லீரலை சுத்தப்படுத்தவும், தலைமுடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் பயன்படுகிறது.
இது முடி உதிர்தல், பொடுகு, முன்கூட்டியே நரைத்தல் (இளநரை) போன்ற முடி பிரச்சனைகளுக்கு அற்புதமாக பயன் படுகிறது, மேலும் முடியை வலுப்படுத்துகிறது.
1. கரிசலாங்கண்ணி எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
கரிசலாங்கண்ணி எண்ணெய் உச்சந்தலையில் உள்ள முடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இதனால் வழுக்கை தலையிலும் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இந்த எண்ணெய் தலையில் 10 நிமிடம் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2. கரிசலாங்கண்ணி எண்ணெய்முடி உதிர்தல் மற்றும் வழுக்கையைத் தடுக்கிறது
முடி உதிர்வதை தடுக்கும் இயற்கை சிகிச்சைகளில் கரிசலாங்கண்ணி எண்ணெய் மிகவும் முக்கியமானது.
கரிசலாங்கண்ணி மூலிகையில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, அவை முடி உதிர்வதைக் தடுக்க உதவும்.
நீங்கள் தூங்குவதற்கு முன், உங்கள் உச்சந்தலையில் கரிசலாங்கண்ணி எண்ணெயை 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும், இது முடியின் வேரில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது, அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள கரிசலாங்கண்ணி எண்ணெயை, உங்கள் முடி வளர்ச்சியை தூண்டும்.
மன அழுத்தத்தால் உங்களுக்கு முடி கொட்டுமானால், நீங்கள் கண்டிப்பாக கரிசலாங்கண்ணி எண்ணெயை தினமும் பயன்படுத்துங்கள். இது உங்கள் தலையை குளிர்வித்து, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது.
3. கரிசலாங்கண்ணி எண்ணெய் பொடுகு மற்றும் வறண்ட கூந்தலை சரிசெய்யும்
கரிசலாங்கண்ணி எண்ணெய், பொடுகை குறைக்க உதவுகிறது. இது உச்சந்தலையில் திட்டு திட்டாக முடி உதிர்வதை குறைக்கிறது.
கரிசலாங்கண்ணி எண்ணெய் உச்சந்தலையில் விரைவாக செயல்பட்டு, உலர்ந்த உச்சந்தலையை குளிர்ச்சி அடைய செய்கிறது.
4. இளநரைக்கு சிறந்த தீர்வு கரிசலாங்கண்ணி எண்ணெய்
கரிசலாங்கண்ணி எண்ணெய் முடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்கவும், முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் எண்ணெயுடன் கரிசலாங்கண்ணி எண்ணெயை கலந்து பயன்படுத்துங்கள்.
5. முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது
கரிசலாங்கண்ணி எண்ணெய் மசாஜ் உங்கள் முடி வேர்களுக்கு அதிக அளவில் இரத்தத்தை எடுத்து சென்று முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
மேலும் முடி வளர்ச்சிக்கு தேவையான அணைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளதால், கரிசலாங்கண்ணி எண்ணெய் மசாஜ் உங்களுக்கு சிறந்த பலனை அளிக்கும்.
6. கல்லீரலை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி செடி இலைச்சாறு கல்லீரல் டானிக் என்று அழைக்கப்படுகிறது. இது கல்லீரலின் நச்சுத்தன்மையை நீக்கி அதன் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கல்லீரலின் உயிரணு உற்பத்திக்கும் உதவுகிறது.
7. ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகிறது
கரிசலாங்கண்ணி எண்ணெய் சரும ஆரோக்கியத்திற்கும், சரும பிரச்சனைக்கும் சிறந்தது.
இது உங்கள் சருமத்தில் சோர்வை நீக்கி புத்துணர்வு பெற வழி செய்கிறது. இதனால் தோல் சுருக்கங்கள் நீங்கி நீணங்கி உங்கள் சருமம் பொலிவு பெரும்.
மேலும் கரிசலாங்கண்ணி எண்ணெய் உங்கள் முகத்திலுள்ள முகப்பரு, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது
8. தலைவலியில் இருந்து நிவாரணம்
கரிசலாங்கண்ணி எண்ணெய் தலைவலிக்கு சிறந்த வீடு மருந்து. குறிப்பாக மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற இதை பயன்படுத்தலாம்.
கரிசலாங்கண்ணி எண்ணையை 2-3 சொட்டுக்கள் மூக்கில் விட்டால் தலைவலி குணமாகும்
9. கரிசலாங்கண்ணி எண்ணெய் பார்வையை அதிகரிக்கிறது
கண் பார்வையை மேம்படுத்த கரிசலாங்கண்ணி எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கண்ணிலும், தினமும் காலையில் 2 துளிகள் கரிசலாங்கண்ணி எண்ணெய்யை விட கண் பார்வையை அதிகரிக்கும். (மருத்துவரின் ஆலோசனை பெற்று இந்த முறையை நீங்கள் செய்யலாம்)
10. மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை போக்கும்
கரிசலாங்கண்ணி மன அழுத்த நிவாரணி என்று அழைக்கப்படுகிறது.
கரிசலாங்கண்ணி எண்ணெயில் உள்ள இயற்கையான வேதி பொருட்கள் (மெக்னீசியம்) மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். இதனால் மனஅழுத்தம் குறைந்து நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
11. நினைவாற்றல் அதிகரிக்க கரிசலாங்கண்ணி எண்ணெய்
அஸ்வகந்தா (மருத்துவ மூலிகை) உடன் கரிசலாங்கண்ணி எண்ணையை சேர்த்து பயன்படுத்தினால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
கரிசலாங்கண்ணி எண்ணெய் பயன்கள் – கரிசலாங்கண்ணி எண்ணெயின் 11 ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்த்தோம்.
கரிசலாங்கண்ணி எண்ணெய் பயன்களில் மிக முக்கியமானது தலைமுடி பராமரிப்பு தான். முடி உதிர்தல்,பொடுகு மற்றும் இளநரை போன்ற அனைத்து முடி பராமரிப்பு பிரச்சனைகளை கரிசலாங்கண்ணி எண்ணெய் எவ்வாறு தெரிகிறது எண்டு முழுமையாக அறிந்து கொண்டீர்கள் என நம்புகிறோம்.
English Summary:
The karisalankanni oil uses in tamil has numerous benefits to our lifestyle. karisalankanni oil for hair growth in Tamil. Mostly it is used for hair growth and hair-related ailments. karisalankanni ennai payangal.