நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் டிப்ஸ்: இதை பின்பற்றுங்கள் அழகான நீளமான கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். (Thick & long hair growth tips in tamil)
முடி கொட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்? பெரும்பாலும் நம் தலை முடி எந்த ஒரு காரணமும் இல்லாமல் உதிர்ந்து, கூந்தலின் அழகும், நீளமும் குறைந்து பலவீனமாகிறது என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் அது காரணம் அல்ல.
நம் வாழ்க்கை முறை மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தலை முடியை பராமரிக்க முடியாமல் போகின்றது.
தினசரி வாழ்வின் உணவு பழக்கம், வெப்பம், தூசி, டென்ஷன், வியர்வை, பொடுகு, கெமிக்கல் ஷாம்பூ, கண்டிஷனர் போன்றவற்றால் உள்ளிருந்து வளர்ச்சி பாதிக்கப்பட்டு தலை முடி உதிர்ந்து கூந்தல் வளர்ச்சி தடைப்படுகிறது.
அழகான மற்றும் நீளமான கூந்தல் என்றால் ஆசை படாத பெண்களே கிடையாது. அதற்காக அதிக அளவில் முயற்சிகளும் செய்து வருகிறார்கள். (Thick & long hair growth tips in tamil)
தலை முடியை அழகாக வைத்து கொள்வது ஆண், பெண் இருவருக்குமே முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் ஆண்களை விட பெண்களுக்கு தான் நீளமான கூந்தல், தலை முடி பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. உங்களுக்கு நீளமான அழகான கூந்தல் வளர சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நீண்ட அழகான கூந்தல் வளர்ச்சிக்கு நம் உணவு பழக்க முறையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தலை முடி அழகாக வளர வெளிப்புறமாக பயன்படுத்தும் பொருட்களை தவிர, நாம் தினமும் உண்ணும் உணவு முறை மிகவும் முக்கியம்.
ஏனெனில் சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் அதிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து நீளமான கூந்தல் வளரவும் அதனை அழகாக பராமரிக்கவும் உதவும்.
நீளமான கூந்தலுக்கு எது தடையாக இருக்கிறது?
நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் காரணம் என்ன? அதற்கான குறைபாடுகளை பற்றி தெறிந்து கொள்வோம்.
1. பொடுகு தொல்லை
தலையில் பொடுகு பிரச்சனை இருந்தால் முடி வளர்ச்சி தடை படும்.
எனவே தலைமுடியை பொடுகு இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
தலையில் பொடுகு வராமல் இருக்க இந்த வழிமுறைகளை செய்துபாருங்கள் இனி பொடுகே வராது.
ஒரு சுத்தமா கிண்ணத்தில் நான்கு டேபிள் ஸ்பூன் புளித்த தயிர், இரண்டு டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ், ஒரு டேபிள் ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் இவை அனைத்தயும் நன்றாக கலந்து தலையில் தேய்த்து இருபது நிமிடம் ஊறவைத்து தலைக்கு குளித்தால் போதும்.
வாரம் இருமுறை இதை பின்பற்றினால் பொடுகு நிரந்தரமாக போய்விடும் தலை முடி வேகமாக வளரும்.
2. உடல் உஷ்ணம்
உடல் உஷ்ணம் அதிகமாவதன் காரணமாக தலை முடி வலுவிழந்து வளர்ச்சி தடைபடும்.
எனவே வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்தால் உடல் உஷ்ணம் குறையும்.
ஐம்பது கிராம் நல்லெண்ணெயை தலை முழுவதும் நன்றாக தேய்த்து, பத்து நிமிடம் மசாஜ் செய்து, அரை மணிநேரம் ஊறவைத்து, தலைக்கு குளித்தால் உடல் உஷ்ணம் குறைந்து தலை முடி ஆரோக்யமாக நீண்டு வளரும்.
3. கெமிகல் ஷாம்பு
அதிக அளவு கெமிகள் உள்ள கண்டிஷனர்களை தவிர்ப்பது நல்லது. கண்டிஷனரில் உள்ள கெமிகல் முடி உதிர்வை ஏற்படுத்தும். மேலும் முடி வளர்ச்சியை பாதிக்கும்.
எனவே வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை (தயிர் மற்றும் வெந்தயம்) கொண்டு தலை முடியை கண்டிஷனர் செய்து தலை முடியை பொலிவாக வளர்க்கலாம்.
புளித்த தயிர்
ஐம்பது கிராம் தயிரை இரவு முழுதும் புளிக்க வைத்து தலையில் தேய்த்து, அரை மணிநேரம் ஊறவைத்து, லேசான ஷாம்பூ போட்டு குளித்தால் போதும் கண்டிஷனர் செய்தது போல் பலன் கிடைக்கும்.
வெந்தயம்
இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயதை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் அதை வடிகட்டி, வெந்தயத்தை மைய அரைத்துக் கொள்ளுங்கள்.
அதை தலை முழுவதும் தடவி அரை மணிநேரம் ஊறவைத்து, லேசான ஷாம்பூ போட்டு குளித்தால் போதும்.
வாரம் ஒருமுறை செய்தால் கெமிக்கல் இல்லாமல் தலை முடியை கண்டிஷனர் செய்வதன் மூலம் தலை முடிக்கு பாதிப்பு குறையும். தலை முடி வேகமாக வளரும்.
4. தலை குளியல் முறை
நீங்கள் தலைக்கு குளிக்கும் பொழுது, தலையில் உள்ள எண்ணெய் முழுவதுமாக போய்விடும். எனவே உடல் உஷ்ணம் அதிகரிக்கும். எனவே வாரம் இரு முறை தலைக்கு குளித்தால் நல்லது.
தலைக்கு குளித்தவுடன் ஹர் ட்ரையர் பயன்படுத்தி தலை முடியை காயவைப்பது முடி உதிர்வை அதிகரிக்கும். அதில் ஏற்படும் உஷ்ணம் காரணமாக தலை முடி உடைந்து பாதிப்படையும். எனவே இயற்கையான முறையில் தலை முடியை உலர்த்துங்கள்.
தலைக்கு குளித்தவுடன் ஈரமான முடி மிகவும் மென்மையாக இருக்கும், எனவே உடனடியாக முடியை காயவிடுங்கள். மேலும் ஈரமான முடியில் சீப்பு போட்டு வார கூடாது.
தலை முடி ஈரமாக இருக்கும் போது மென்மையாகவும் பலவீனமாகவும் இருக்கும். எனவே தலைமுடி நன்றாக காய்ந்த பிறகு சீப்பு பயன்படுத்துங்கள்.
நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் டிப்ஸ்
நீளமான தலை முடி வளர பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பற்றி தெறிந்து கொள்வோம். (Thick & long hair growth tips in tamil))
1. தேங்காய் எண்ணெய்
ஐம்பது கிராம் தேங்காய் எண்ணெயை அடுப்பில் வைத்து மிதமாக சூடுபடுத்துங்கள்.
அதை ஆறவைத்து தலையில் தேய்த்து, அரை மணிநேரம் ஊறவையுங்கள்.
பின் லேசான ஷாம்பூ போட்டு குளித்தால், உடல் உஷ்ணம் குறையும். அதனால் தலை முடி உதிர்வது குறைந்து அழகான நீளமான முடி வளரும்.
2. கருவேப்பிலை
ஒரு கிண்ணம் நிறைய கருவேப்பிலையை உதிர்த்து, இரண்டு நாட்கள் நிழலில் காயவையுங்கள்.
பின் அதை அறைத்து பொடியாக்கி ஒரு துணியில் கட்டி கொள்ளுங்கள். அதை 200 கிராம் தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊறவைத்து பயன்படுத்தினால், தலை முடி உதிர்தல் குறைந்து, தலை முடி நீண்டு வளரும்.
அல்லது தேங்காய் எண்ணெயில் கட்டி வைத்த கருவேப்பிலையை இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து, ஆறவைக்க வேண்டும். பின் வாரம் இருமுறை பயன்படுத்தினால் போதும் அழகான நீளமான கூந்தல் வேகமாக வளரும்.
3. கற்றாழை
கற்றாழை அனைவருக்கும் தெறிந்த ஒன்று. கற்றாழை ஜெல் (Aloe vera Gel) சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை அளிக்கும் ஒன்று.
கற்றாழை ஜெல் உங்கள் தலை முடிக்கு ஊட்டமளிக்கும். மேலும் ஈரப்பதத்தை தக்கவைத்து முடிக்கு போஷாக்கு அளிக்கும்.
கற்றாழையை சிறிதளவு வெட்டி, அதன் மேல் உள்ள தோலை நீக்கவும். உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து, அரைத்து பேஸ்ட் போல தயார் செய்யவும்.
பிறகு அதை தலையில் தேய்த்து இருபது நிமிடம் ஊறவைக்கவும். பின் லேசான ஷாம்பூ போட்டு தலைக்கு குளித்தால் போதும் ஆரோக்கியமான தலை முடி வளரும். மேலும் கற்றாழையை ஜூஸாகவும் குடிக்கலாம், உடலுக்கு குளிர்ச்சி தரும்.
4. வெங்காயம்
இரண்டு வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி அரைத்து கொள்ளவும். பின் அதை வடிகட்டி வெங்காய சாறை எடுத்து கொள்ளுங்கள்.
இந்த வடிகட்டிய வெங்காய சாற்றை தலையில் தேய்த்து இருபது நிமிடம் ஊறவைத்து, லேசான ஷாம்பு போட்டு முடியை அலசுங்கள். மாதம் இரு முறை இவ்வாறு பயன் படுத்துங்கள், நீளமான தலை முடி வளர்வதை காணலாம்.
5. வல்லாரை கீரை
வல்லாரை கீரை ஒரு கை அளவு எடுத்து, அதை அறைத்து சாறை வடி கட்டவும்.
அந்த சாறை தலையில் தேய்த்து, அரைமணிநேரம் ஊறவைத்து அலசினால் மிக எளிமையான முறையில் நீளமான கூந்தலை பெறலாம்.
6. முட்டை வெள்ளை கரு
முட்டை வெள்ளை கரு நம் அழகை மேன்படுத்த உதவும். முட்டை வெள்ளை கருவில் உள்ள புரதசத்து நம் சருமத்துக்கும், தலை முடிக்கும் அதிகமான போஷாக்களிக்கும்.
ஒரு முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து கொள்ளுங்கள். அதை தலையில் தேய்த்து, பதினைந்து நிமிடம் ஊறவைக்கவும். பின் லேசான ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை தடவினால் தலை முடி வேகமாகவும் நீளமாகவும் வளரும்.
மேலும் சில அழகு குறிப்புகள்
- முகம் பொலிவு பெற இயற்கையான வழிகள்
- இந்த தக்காளி பேஸ் பேக் முகத்தை அழகாக ஜொலிக்க வைக்கும்.
- சருமத்தை இளமையாக வைக்க கற்றாழை ஜெல்லை எவ்வாறு எடுப்பது?
ஒவ்வொரு வீட்டிலும் தலை முடி வளர்ச்சி பற்றிய பிரச்சனை அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் நம் வாழ்க்கை முறையும், உணவு பழக்க வழக்கங்களும் தான். எனவே ஆரோக்கியமான உணவு முறைகளை பயன்படுத்தி வாழ வேண்டும்.
இவ்வாறு வீட்டில் உள்ள எளிமையான பொருட்களை கொண்டு அழகான நீளமா கூந்தலை பெறலாம். ஆரோக்கியமான உணவு பழக்கம் உங்கள் தலை முடியை நீளமாக வளர்க்கவும், அழகாக பராமரிக்கவும் கூந்தலுக்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கும்.
References
- Hair growth analysis with computer-assisted methods
- Alopecia Bald scalp
நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் டிப்ஸ்: இதை பின்பற்றுங்கள் அழகான நீளமான கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். (Thick long hair growth tips in tamil). Front head hair growth tips in tamil oil.