Lord Shiva Quotes in Tamil (Powerful & Positive) Sivan Quotes with Images. சிவன் பொன்மொழிகள். You can use these Sivan quotes Tamil as WhatsApp Sivan status tamil- சிவனை போற்றும் வரிகள்.
Here I have listed the lord Shiva quotes in Tamil. You can also get lord shiva images with quotes in Tamil—சிவன் பொன்மொழிகள். Sivan quotes in Tamil. These positive and powerful lord shiva quotes give you more inner energy and strength for your soul.
Lord Shiva Quotes in Tamil
கொடுப்பதற்கு சிவன் இருக்கையில்
தடுப்பதற்கு எவன் இருக்கான்!
காப்பதில் என் சிவன் போல்
கடவுள் இங்கு யாரு!
கர்ம வினைகளையும் தீர்த்திடும்
ஆலவாயன் திருநீரு!
எவன் போனால் என்ன
சிவன் இருக்கான் எனக்கு
positive lord shiva quotes in tamil
ஈசனின் கடைக்கண் உன்மேல் இருக்க
கவலைகள் உனக்கேன் மனமே
வருவது வரட்டும் துணிந்துநில் தினமே
கஷ்டங்கள் உன்னை அண்டாது இனிமே
Lord shiva images with quotes in tamil
ஒருவனை யார் கைவிட்டாலும்
அவன் நம்பும் ஈசன் அவனை
ஒரு நாளும் கைவிடமாட்டான்
Powerful shiva quotes in tamil
Sivan Images with Quotes in Tamil
ஆதியும் அந்தமும் ஆன சிவனே
அழியா பெருவாழ்வு கொடுப்பவனும் அவனே!
உருவமும் அருவமும் ஆன ஈசனே
உள்ளிருந்து என்னை இயக்கும் சக்தியும் அவனே!
உன்னை நினைக்காத நாளும் இல்லை
உன்னை நினைக்காமல் நானும் இல்லை
சிவ சிவ! ஓம் நமசிவாய!
பொய்யான உலகில்
மெய்யான வாழ்வு தரும் மகாதேவா!
சிக்கென உன்னை பிடித்தால் என்
சிக்கல்கள் பட்டென பறந்தோடும் பரமேஸ்வரா!
பயம் கொள்ளாதே!
நினைவில் கொள்…
என்னை மீறி உன்னை எதுவும் நெருங்காது!
Sivan Quotes in Tamil
முக்கண்ணா என்றழைத்தேன் வரவில்லை
பரம்பொருளே என்றழைத்தேன் வரவில்லை
உலக முதல்வனே என்றழைத்தேன் வரவில்லை
இறுதியில், என் தந்தை என்றழைத்தேன்
வந்தாய்! ஆட்கொண்டாய்! வாழ்வு தந்தாய்
என் அப்பனே! ஓம் நமசிவாய!
அஞ்சுவதும் அடிபணிவதும் ஈசன் ஒருவனுக்கே!
என் உயிரை உடல் மறந்தாலும்
உடலை இயக்கும் உயிர் மறந்தாலும்
கண்கள் இமைப்பதை மறந்தாலும்
என் நெஞ்சம் துடிப்பதை மறந்தாலும்
என் உள்ளிருந் தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே!
sivan images with quotes in tamil
தோல்வி நிச்சயமானாலும் முயற்சி செய்
சிவன் இருக்க,
தோல்வியை நீ தோற்கடிக்கலாம்!
எப்பொழுதும் உன்னை நினைக்க வேண்டும்
முப்பொழுதும் உன் அடிகளை தொழ வேண்டும்
அனுதினமும் உன் நாமத்தை சொல்ல வேண்டும் ஒரு
கணமும் உனை மறவா வரம் வேண்டும்!
எமனே பயங்கொள்ளும் சிவன் என்னுள் இருக்க
எதற்கும் அஞ்சேன்
எப்பொழுதும் அஞ்சேன்!
கையிலே சூலம்
கழுத்திலே ஆலகாலம்
எம் சிவனை தொழுவோர்க்கு
ஏதுமில்லை கேடு காலம்
எங்கே உன்னை வேண்டாம் என ஒதுக்கி வைக்கிறார்களோ
அங்கே சிவன் உன்னை செதுக்கி உயர்த்தி வைப்பார்.
பொறுத்திரு! சிறந்திரு!
உனக்காக யாரும் இல்லை என்று கவலை படாதே
நான் இருக்கிறேன்!
உனக்கான எதுவும்
உன்னை விட்டு போகாது
உன்னை விட்டு போனால்
அது உனக்கானது அல்ல
சவம் ஆகும்வரை
சிவனை நினை மனமே..
நீ சுகம் ஆவாய் அனுதினமே..
எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கவலையில்லை
என்னுடன் இருப்பது என் அப்பன் ஈசன்
படியளக்க சிவம் இருக்க பஞ்சமில்லா வாழ்வு இருக்கும்!
அன்பும் நிரந்தரம் இல்லை
ஆசையும் நிரந்தரமில்லை
உடலும் உயிரும் நிரந்தரம் இல்லை
இன்பமும் துன்பமும் நிரந்திரம் இல்லை
ஆனால் ஈசனே…
நீ மட்டும் எனக்கு எப்பொழுதும் நிரந்தரம்
வெற்றிக் சிவனின் பரிசு
தோல்வி சிவனின் சோதனை
சிவன் இன்றி எதுவுமில்லை
சிவனை நினைப்போம், அவரே நம் துணை!
கண்ணீர் துளிகளுக்கு மதிப்பு அதிகம்
அதை மனிதர்களிடத்தில் காட்டாதீர்கள்
இறைவனிடத்தில் காட்டுங்கள்
எதிலும் சிவன் இல்லை என்று நினைக்காதே
எல்லாமுமாக இருக்கிறார் நம் சிவபெருமான்.
உன்னை சரணடைந்து விட்டேன் அப்பனே
இனி வாழ்வதும் வீழ்வதும் உன் பொறுப்பு
கடவுள் உனக்கு கஷ்டங்களை தரும் போது கலங்காதே
அவர் உனக்கு கஷ்டங்களை கொடுப்பது உன்னை சோதிக்க அல்ல உன்னால் எவ்வளவு சோதனையை
தாங்க முடியும் என்று உணர்த்தவே!
பிறவாமை வேண்டும்
மீண்டும் பிறந்தால்
உன்னை மறவாமை வேண்டும்
ஆசை உள்ளவன் மனிதனாக திரிகிறான்
ஆசை அற்றவன் சிவமாக வாழ்கிறான்.
உருவமும் அவனே அருவமும் அவனே
உன்னை காப்பது எம்பெருமான் சிவனே!
ஒளியாய் நீ இருப்பதால்
இருளை பற்றிய கவலை எனக்கில்லை
என் அப்பனே
ஒரு முறை சிவபெருமானை சரணடைந்தவர்கள்
பின்பு அவர்களே விட்டு விலக நினைத்தாலும்
சிவன் அவர்களை விட்டு விலகுவதுமில்லை
கைவிடுவதுமில்லை
சிவனை முழுவதுமாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே
அவரின் அருமை புரியும்
கைலாய மலை மீது வாழும் சிவனே
மெய்வாழ்வு நான் வாழ தருவாய் பலமே
உன் பாத சலங்கையில் ஒரு மணியாக
என் மேனி உருமாற தருவாய் ஒரு வரமே!
உன்னை நினைக்காத நாளும் இல்லை
உன்னை நினைக்காமல் நானும் இல்லை
சிவ சிவ! ஓம் நமசிவாய!
நானே கதி என்று இருக்கும் உன்னை
நான் எப்படி ஏமாற்றுவேன்
கலங்காதே, வருந்தாதே …
உன் வேண்டுதல்கள் அனைத்தையும்
நான் நிறைவேற்றுவேன்
வழி தெரியாத பாதையில்
பல வலியோடு, விடை தெரியாமல்
நீ நடக்கும் போது
உனக்கு தெரியாமல்
உனக்கு துணையாக நான் வருவேன்
காற்றே விஷமாக மாறி
கழுத்தை நெறிக்கும் நிலை வந்தாலும்
கலங்காதே
ஆலகால விஷத்தையே அமிர்தமாக்கி
உன்னை காத்திட
அப்பன் ஈசன் நான் இருக்கிறேன்
கவலையை விடு
சிவனுக்கு மேல் ஒரு தெய்வமும் இல்லை
சிவனை வணங்காத ஒரு தெய்வம் இல்லை
நமச்சிவாய வாழ்க
உன்னை வீழ வைக்க
அகிலமே முயன்றாலும்
உன்னை வாழ வைக்க
நான் இருக்கிறேன்
நீ இன்றி இவ்வுலகின் ஒரு அணுவும் அசையாது
அதை மறந்தேன், நான் என்ற கர்வம் கொண்டேன்
பின் தெளிந்தேன், ஈசனே!
நான் ஒன்றும் இல்லை.
அனைத்தும் நீ தான் என்று
சேர்க்கை
சிவம் ஆனால்…
வாழ்க்கை
வளமாகும்….
உனக்கு நீயே துணை
என்று செயல்பட்டால்
உன்னுள் இருக்கும் சிவம்
உனக்கு என்றும் துணை நிற்கும்
நொடிக்கு நொடி மாறும் இந்த பிரபஞ்சம் வெறும் மாயமே அனைத்து மாற்றங்களுக்கும் உட்படாமல்
சகலத்தையும் தன்னுள் வைத்து ஆட்கொள்ளும்
அந்த சிவம் மட்டுமே நிரந்தரம்
எந்த சிக்கலும் உன்னை சிதைக்க வந்ததல்ல
செதுக்க வந்ததே
நல்லதே நடக்கும்… ஓம் நமசிவாய
வாழ்க்கையில் எத்தனை கைகள் உன்னை தள்ளிவிட்டாலும்,
நீ என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை
உன்னை கைவிடாது காக்கும்.
சிவன் எங்கு இருக்கிறார் என்று அனுதினமும் தேடாதே
காற்றாக மாறி உன் மூச்சாக
உன்னுள் என்றும் நிறைந்து இருக்கிறார், சிவபெருமான்
நான் உன் நிழலாக இருக்கும் போது
இந்த உலகில் உன்னை வீழ்த்த
எவரும் இல்லை!
ஈசனுக்கு நன்றி சொல்வதை அனுதினமும் மறக்காதீர்கள் ஏனெனில் நமக்கே தெரியாமல் பல நேரங்களில் நம்மை ஆபத்தில்
இருந்து காப்பாற்றி இருப்பார்…
என்ன தான் கடவுள் ஆனாலும்
அவருக்கு நாம் பிள்ளைகள் தானே!
எல்லாத் தடைகளும் தன்னால் விலகிவிடும்
நம்பிக்கையோடு நாள்தோறும் தொழுவோம்
நம் ஈசனை. ஓம் நமசிவாய!
அளவுகடந்த கஷ்டத்தை
அனுபவிக்கிறாய் என்று கவலைப்படாதே!
நாளை அளவில்லாத இன்பம்
உனக்காக காத்திருக்கிறது வருந்தாதே!
கொடுப்பது ஈசன் என்று தெரிந்தால்
கிடைப்பது எதுவும் குறைவாக தெரியாது
இன்று உனக்கு நடந்தது எல்லாம் என் இஷ்டப்படியே
நீ ஒன்றும் குழம்பாதே, என்றும் கலங்காதே
எல்லாம் நன்மைக்கே!
உன்னுடைய விருப்பப்படி இந்த
உலகில் எதுவும் நடப்பதில்லை
ஈசனின் விருப்பப்படியே
இந்த உலகம் இயங்குகிறது
இதை நீ அறியும் வரை
உன்னை வாழ்வில் வெற்றி பெற இயலாது.
உன் பாதம் பற்றியதால்
என் பாவம் கரைந்ததையா
உன் நாமம் சொல்வதால்
என் வாழ்வு இனிக்குதையா
கீழாக நின்றாலும் தலையில் எழுதியது
நடந்தே தீரும்!
ஓம் நமசிவாய
மனம் உருகி வேண்டுவோரின் வேண்டுதல் என்றும் வீணாவதில்லை!
சிவன், சிவன், ஈசன், மகாதேவன், என பல பெயர்களில் அழைக்கப்படும் சிவபெருமான், இந்து மதத்தின் முக்கியமான கடவுள். இந்திய கலாச்சாரத்தில் முதன்மையான கடுவுளாக இருக்கும், சிவபெருமானின் பொன்மொழிகள் இங்கே இடம்பெற்றுள்ளன.
பிரம்மா மற்றும் விஷ்ணுவை உள்ளடக்கிய இந்து மும்மூர்த்திகளான திரிமூர்த்திக்குள் சிவன் “அழிப்பவர்” என்று அழைக்கப்படுகிறார். பிரபஞ்சத்தை உருவாக்கி, காத்து, அழிக்கும் கடுவுள் சிவபெருமான் மட்டுமே!
சிவனை வாங்கி தொழுவோம், அவர் அருளால் மோட்சம் பெறுவோம், முக்தி அடைவோம்.. சிவ சிவ… ஓம் நமசிவாய…
Read More
Here I have listed the lord Shiva quotes in Tamil. Lord Shiva Quotes in Tamil (Powerful & Positive) Sivan Quotes with Images. You can use these sivan quotes tamil as sivan status tamil – சிவன் பொன்மொழிகள் – சிவனை போற்றும் வரிகள்.
Sivan quotes in Tamil. You can also get lord shiva images with quotes in Tamil. These positive and powerful lord shiva quotes give you more inner energy and strength for your soul—சிவன் பொன்மொழிகள்.